நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே!
வரி பொருள்
பகைவர்கள் பாதுகாத்த வலிய மதில்களைக் கடந்து வென்று, அவர்களின் முடிப்பொன்னால் தன் வீரக்கழலை அலங்கரிக்கும் வல்ல அரசனாக கிள்ளிவளவன் புகழப்படுகிறான்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது