வரை புரையும் மழகளிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
வரி பொருள்
மலைபோன்ற யானைகளின் மேல் வானைத் தொடுவது போல கொடிகள் அசையும் பெரும்படையுடைய வீரவேந்தன் என அரசன் அறிமுகப்படுத்தப்படுகிறான்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது