நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!
வரி பொருள்
தமிழகத்தின் மூவேந்தருள் அரசாட்சியின் சிறப்பால் கிள்ளிவளவனின் ஆட்சி தனித்துப் பெயர் பெறுகிறது எனப் புலவர் தொடங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது