‘ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள’ என,
‘நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என’
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
வரி பொருள்
பெரும் குற்றங்களுக்குக் கூட பரிகாரம் உண்டு என்று அறநூல் கூறினாலும், செய்த நன்றியை அழிப்பவனுக்கு மீட்பு இல்லை என்ற கடுமையான அறக்கருத்தை புலவர் முன்வைக்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது