புலவரை யிறந்த புகழ்சா றோன்றல்
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி
வான்றோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற்
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்
வரி பொருள்
புலவரின் சொல்லெல்லையைக் கடந்த புகழுடைய அரசன் கைப்பற்றிய கானப்பேரெயில், ஆழ்ந்த அகழி, வானைத் தொடும் மதில், விண்மீன்போன்ற மதிற்சூட்டுகள், சூரியகதிரும் நுழைய முடியாத காவற்காடு, சிற்றரண்கள் ஆகியவற்றால் அணுக முடியாத கோட்டையாக இருந்தது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது