தென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாவெல்லை
குன்றுமலை காடுநா
டொன்றுபட்டு வழிமொழியக்
கொடிதுகடிந்து கோறிருத்திப்
படுவதுண்டு பகலாற்றி
இனிதுருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல
வரி பொருள்
தெற்கே குமரி, வடக்கே இமயம், கிழக்கும் மேற்கும் கடல்கள் எல்லையாகிய நிலப்பரப்பில் வாழ்வோர் ஒன்றுபட்டு போற்றும் வகையில், தீமையை நீக்கி செங்கோலைச் செவ்வையாக நடத்தி, முன்னோர் ஆண்ட மரபைக் காத்தவனாக அரசன் விளங்குகிறான்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது